
வேலூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "திரிபுராவில் புரட்சியாளர் லெனின் அவர்களது சிலை உடைக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச்.ராஜா மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் என்பது ஒரு பெயரோ சிலையோ உருவமோ அல்ல. பெரியார் என்பது ஒரு தத்துவம்.
நேரமும் தேதியும் தெரிவித்தால் பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறார்கள்", என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) March 7, 2018
BY SATHEESH | MAR 7, 2018 10:40 AM #HRAJA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories