‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 20, 2018 07:05 PM
![Sathyan Gnanasekaran opens up who won the arjuna award Sathyan Gnanasekaran opens up who won the arjuna award](https://i5.behindwoods.com/news-shots/images/tamil-news/sathyan-gnanasekaran-opens-up-who-won-the-arjuna-award.jpg)
தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ள ’அர்ஜுனா விருது’ கிடைத்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சத்யன் ஞானசேகரன், தனக்கு கிடைக்கவுள்ள அர்ஜுனா விருதை தன் பெற்றோருக்கு சமர்ப்பிப்பதாகவும், இந்த அர்ஜூனா விருது பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும், 25 வயதிலேயே இந்த உயரிய விருதினை பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதுதான் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
Tags : #SATHYANGNANASEKARAN #ARJUNAAWARD #INDIA #TENNISPLAYER #TAMILNADU
![](https://www.behindwoods.com/images/spacer.gif)