நீங்க ரசிச்சு சாப்பிடுற 'சத்யம் பாப்கார்ன்'.. எங்கேருந்து வருது தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 05, 2018 01:40 PM
sathyam popcorn\'s coming Straight from the River Valley of Nebraska

சினிமாத்துறையினரின் பெரும் ஆதரவை பெற்ற சத்தியத்தை சமீபத்தில் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் வாங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.ஆனால் அதற்கு விளக்கம் அளித்த சத்யம் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எப்போதும் சத்யம் மதிப்பளிப்பதாகும்,பிவிஆர் சினிமாஸ் சத்யம் சினிமாஸை வாங்கினாலும் சத்யம் என்ற பெயருடனே அது தொடரும் என தெரிவித்திருந்தது.

 

சத்யம் சினிமாஸில் படம் பார்ப்பது எப்படி ரசிகர்களுக்கு ஒரு பெரும் அனுபவமோ அதுபோல் சத்யமின் பாப்கார்ன் ரசிகர்களிடம் மிக பிரபலமான ஒன்று.படத்திற்கு செல்லும் ரசிகர்கள் கண்டிப்பாக பாப்கார்ன்யை சுவைக்காமல் படம் பார்ப்பது மிகவும் அரிது.சத்யமின் பாப்கார்ன்யை ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடும் அளவிற்கு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

இந்நிலையில் அந்த சுவையான பாப்காநிற்கு பயன்படுத்தப்படும் கார்ன் எங்கிருந்து வருகிறது என்பதை சத்யம் தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளது.இந்த கார்ன்களானது அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ஆற்றுப்படுகையின் அருகில் விளைகிறது. அங்கு விளையும்  கார்ன்களையே சத்யமானது தனது ரசிகர்களுக்கு வழங்கும் சுவைமிகு பாப்கார்ன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. 20வருடமாக ரசிகர்களின் பேரன்பை பெற்ற சத்யமின் பாப்கார்ன் ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது.

Tags : #SATHYAM #POPCORN