கோல்டு மெடல் விருதுகள் விழாவில்... வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்கிய பிரபலம்!
Home > News Shots > தமிழ்By Behindwoods News Bureau | Jun 19, 2018 04:43 PM
பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான 5-வது கோல்டு மெடல் விருதுகள் விழா,நேற்று முன்தினம் சென்னை ட்ரேட் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் நமது சமூகம்-மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ரியல் ஹீரோக்கள் எஸ்.ஆர்.ஜாங்கிட், பாலம் கல்யாணசுந்தரம், மலர்க்கொடி மற்றும் சண்முகம் ஆகியோரின் உயரிய சேவையைப் பாராட்டி பிஹைண்ட்வுட்ஸ் அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது.மேலும் கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போரட்டத்திற்கு தோள் கொடுத்த ஒட்டுமொத்த இளைஞர்களைக் கவுரவிக்கும் வகையில், இந்த போராட்டத்திற்கு விதை போட்ட 10 இளைஞர்களை மேடைக்கு அழைத்து அவர்களுக்கு 'தி பெர்சன் ஃஆப் தி இயர்' விருது வழங்கப்பட்டது.
இதுதவிர படிக்க வசதியற்ற குழந்தைகளின் கல்விக்காக ரூபாய் 3 லட்சம் நன்கொடையை, சரவணா செல்வரத்தினம் உரிமையாளர் திரு. சரவணா அருள் அவர்கள் வழங்கினார். உடல்நிலை காரணத்தால் அவரால் விழாவுக்கு வரமுடியவில்லை எனினும், அவர் வழங்கிய தொகை திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களால் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி துணை முதல்வர் ஜார்ஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது.
சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி நமது சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ரியல் ஹீரோக்களைக் கவுரவித்ததில், 'பிஹைண்ட்வுட்ஸ்' நிறுவனம் பெருமிதம் கொள்கிறது...