
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சமீபத்தில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் பங்கேற்றனர்.
அப்போது அவர் பேசுகையில், "போதை பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இளம்பெண்கள் கூட பீர் குடிப்பதைப் பார்க்கும்போது கவலை ஏற்படுகிறது.
இளைஞர்களிடையேயான போதை பழக்கம் மிகப்பெரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. கோவாவில் போதை பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ எனக்கூறினார்.
BY MANJULA | FEB 10, 2018 5:22 PM #BEER #GOA #YOUNGGIRLS #இளம்பெண்கள் #பீர் #கோவா #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories