'சேவாக் என்னுடன் பேச மாட்டார்'.. சச்சின் டெண்டுல்கர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 11, 2018 05:55 PM

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சேவாக்,சச்சின் இருவரும் தங்களது கடந்த கால நினைவுகள் குறித்த விவரங்களை சுவாரசியத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
சேவாக் குறித்து சச்சின் பேசுகையில்,"சேவாக் அணிக்கு வந்த புதிதில் என்னுடன் பேச மாட்டார். மிகவும் கூச்சப்படுவார். இதனால் நானே அவரிடம் சென்று பேச ஆரம்பித்தேன். ஒருநாள் வெளியே சென்று சாப்பிடலாம் என்று நான் கூறியபோது நான் சுத்த சைவம் என்றார். உடனே நான் அசைவம் சாப்பிடுவதால் வெயிட் போட்டு விட்டேனா? என்று கேட்டு அவரை சிக்கன் சாப்பிட வைத்தேன். அன்றுமுதல் சேவாக் சிக்கன் சாப்பிட ஆரம்பித்தார்,'' என்றார்.
இதேபோல சச்சின் குறித்து சேவாக் பேசுகையில், "முதன்முதலில் அவரைப் பார்த்தபோது எனது கையைப்பற்றிக் குலுக்கி விட்டு சென்றுவிட்டார். என்னடா வெறுமனே கையை மட்டும் குலுக்கி விட்டு செல்கிறார் என்று நினைத்தேன். அதேபோல கேப்டனாக கங்குலி,தோனி, ராகுல் என யாராக இருந்தாலும் அவருக்கு களத்தில் சச்சின் ஆலோசனைகள் அளிப்பார். ஒரு போட்டியில் நான் கேப்டனாக இருந்தபோதும் அவர் எனக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளார்,''என்றார்.


RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
