
சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2 லாக்கர்களை உடைத்து சுமார் 32 லட்சம் ரூபாயும், 132 பைகளில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் திருடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
BY SATHEESH | MAR 26, 2018 12:25 PM #IOBBANKTHEFT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories