ஆன்லைனில் மூன்றே நிமிடத்திற்குள் விற்றுத்தீர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்
Home > News Shots > தமிழ்By Behindwoods News Bureau | Jul 26, 2018 02:27 PM
இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் க்ளாசிக் 500 பெகாசுஸ் எடிசன் என்ற ரக பைக்கின் ஆன்லைன் விற்பனை நேற்று மாலை 4 மணி அளவில் தொடங்கியது. தொடங்கிய மூன்று நிமிடங்களுக்குள் அதாவது 178 வினாடிகளில் அந்த பைக் விற்றுத் தீர்ந்து புதிய சாதனை படைத்தது.
ராயல் என்ஃபீல்டின் க்ளாசிக் 500 பெகாசுஸ் எடிசன் உலக அளவில் மொத்தம் 1000 பைக்குகளே விற்பனை என்ற நிலையில் அவற்றில் 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டன. டெல்லியில் உள்ள பிரத்தியேக ஷோரூமில் இந்த பைக்கின் விலை ரூ 2.40 லட்சத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வந்த இந்த பைக்கை வாங்க விரும்பியவர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்தனர். இந்த பைக் இரணடாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்திய 'ஃப்ளையிங் ஃப்ளீ' என்ற ரக பைக்குகளை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.