WATCH VIDEO: 'கொலைமிரட்டல் விடுத்த புல்லட் ராஜாவை'.. தலையில் அடித்து இழுத்துச்சென்ற போலீஸ்!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 10, 2018 12:48 PM
காவல்துறை பெண் அதிகாரியை போனில் மிரட்டிய ரவுடி புல்லட் ராஜாவை தேனியில் போலீசார் கைது செய்தனர்.அவரை பின் தலையில் அடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி செல்லும் வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவரது அண்ணன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வரும் பெண் மருத்துவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து புல்லட் நாகராஜனின் அண்ணனை போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் "எப்போதும் நீங்கள் சிறையில் இருக்க முடியாது வெளியில் வந்துதான் ஆக வேண்டும்,அப்படி வரும்போது வீட்டிற்கு ஒழுங்காக செல்ல முடியாது என எஸ்.பி. ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜ் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தார். அந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் தனது அண்ணனைப் போல் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், புல்லட் நாகராஜ் மிரட்டினார்.
எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் பெரும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா-வுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், வாட்ஸ்-அப் ஆடியோவை வெளியிட்டு இருந்தார்.அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக மதுரை மத்திய சிறை அலுவலர் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், புல்லட் நாகராஜை கைது செய்வதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில், கொலை மிரட்டல், பொது இடத்தில் அருவருப்பான வார்த்தைகளால் பேசி மிரட்டுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் அச்சுறுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த புல்லட் நாகராஜனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.அவரை கைது செய்து அழைத்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.