WATCH VIDEO: உண்மையில் கேட்ச் பிடித்தாரா? இல்லை ஏமாற்றினாரா?.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 18, 2018 02:07 PM
நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் மும்பை-ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறையின்படி மும்பை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின்போது ஹைதராபாத் வீரர் சந்தீப் அடித்த பந்து ஸ்லிப்பில் நின்ற ரோஹித்திடம் சென்றது. அதனை அவர் கேட்ச் பிடித்தார். ஆனால் பந்து தரையில் பட்டது போல தெரிந்ததால் களத்தில் நின்ற அம்பயர்கள் இருவரும் 3-வது அம்பயரிடம் முடிவைக் கேட்டனர்.
வீடியோவைப் பார்த்த 3-வது அம்பயர் உடனடியாக அவுட் கொடுத்து விட்டார். எனினும் பந்து தரையில் பட்டதா?இல்லையா? என்பதை தெளிவாக கணிக்க முடியவில்லை.
இந்தநிலையில் பந்து தரையில் தொட்டு சென்றதாகவும், ரோஹித் சர்மா ஏமாற்றி விட்டார் என்றும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இந்த கேட்ச் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
— Mushfiqur Fan (@NaaginDance) October 17, 2018