ஜடேஜாவை ஓங்கி 'அறையத்' தோன்றியது: ரோகித் ஷர்மா
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 07, 2018 08:25 PM
ரவீந்திர ஜடேஜாவை ஓங்கி அறையத் தோன்றியது என, ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து 'வாட் தி டக் ஷோ' என்னும் நிகழ்ச்சி ஒன்றில் ரோகித் ஷர்மா பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றபோது, எங்கள் குடும்பத்தாரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஒருநாள் நான் என்னுடைய மனைவி,ரஹானே,ஜடேஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காட்டில் சஃபாரி பயணம் செல்ல முடிவு செய்தோம்.
பயணத்தைத் தொடங்கும் போது, மிருகங்களைச் சீண்டக்கூடாது என்ற எச்சரிக்கையுடனே எங்களை அனுப்பிவைத்தார்கள். இதனால் நாங்கள் எச்சரிக்கையுடனே எங்கள் பயணத்தை மேற்கொண்டோம்.
ஒரு இடத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி நடந்தோம். அப்போது, சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 சிறுத்தைப்புலிகள் நடந்து சென்றன.திடீரென அவை எங்களை முறைத்துப் பார்த்தன. இதனால் நாங்கள் பயத்தில் உறைந்தோம்.
பிறகுதான் தெரிந்தது, ஜடேஜா அவைகளைப் பார்த்துக் கத்தியதால் தான் அவை எங்களை முறைத்துப் பார்க்கின்றன என்று.உடனே நான் ஜடேஜாவைப் பார்த்து என்ன செய்கிறாய். நாம் அனைவரும் காட்டுக்குள் இருக்கிறோம் மறந்துவிட்டாயா? சிறுத்தைப்புலிகள் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? அவை பசியோடு இருக்கின்றன, அமைதியாக இரு என்று கோபமாகக் கூறினேன்.
ஆனால் எனது எச்சரிக்கையை சற்றும் கேளாமல்,ஜடேஜா மீண்டும் கத்தினார். சிறுத்தைப்புலிகள் மீண்டும் எங்களை நோக்கி கோபத்துடன் திரும்பின. எங்களின் மனைவிகளும் உடன் இருக்கும்போது அவர்களின் நிலையை நினைத்துப் பார்க்காமல் கத்திய ஜடேஜாவைப் பார்க்க கோபமாக வந்தது.
அவரை ஓங்கி முகத்தில் குத்திவிடலாம், கன்னத்தில் அறைந்துவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், எல்லை மீறி ஏதும் செய்துவிடக்கூடாது என்பதால், அமைதியாக இருந்துவிட்டேன். இப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.''
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- CSK vs RCB: Jadeja explains why he didn't celebrate Virat Kohli's wicket
- விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த ஜடேஜா .. சூப்பர் கிங்ஸ்க்கு இலக்கு இதுதான்!
- இதனால் தான் 'தோற்றோம்'... மும்பை இந்தியன்ஸ் 'கேப்டன்' ரோஹித் சர்மா!
- Here is what Jadeja said about CSK fans
- சென்னை vs மும்பை: முதல் போட்டியை 'வெற்றிக்கணக்குடன்' துவங்குமா தோனி படை?