'அவரவர்கள் வேலையைப் பார்ப்பது நல்லது'.. ரோஹித் சர்மா காட்டம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 21, 2018 11:46 AM
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவுக்கு யோ-யோ டெஸ்ட் நடத்தப்படாமல் இருந்தது. இதனால், முகம்மது சமி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை போல ரோஹித் சர்மாவும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம் எனவும், அவருக்கு பதிலாக ரகானேவை மாற்று வீரராக தயார் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட யோ-யோ டெஸ்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எங்கே போயிருந்தேன், எங்கு நேரத்தை செலவிட்டேன். ஏன் குறிப்பிட்ட நாளில் யோ-யோ தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை. அது எனது சொந்த விவகாரம்.
அவரவர்கள் வேலையைப் பார்ப்பது நல்லது. ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்வது எப்போதுமே நல்லது அல்லவா?,'' என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.