வரலாற்று சாதனை படைத்த இந்தியா...'உலக சாதனையை சமன் செய்த இந்திய வீரர்'!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 10, 2018 08:23 PM
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் உலக சாதனையை சமன் செய்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் அரிய வெற்றியை பதிவு செய்ததோடு, சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸின் உலக சாதனையை சமன் செய்து அசத்தினார்.மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்தார்.இதன் மூலம் இவர், ஒரே டெஸ்டில் அதிககேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் (11 கேட்ச், எதிர்- பாகிஸ்தான், 2013), முன்னாள் இங்கிலாந்து வீரர் ரசல் (11 கேட்ச், எதிர்- தென் ஆப்ரிக்கா, 1995) ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார்.
மேலும் ஒரே டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் பண்ட். இப்பட்டியலில் இந்தியாவின் மற்றொரு விக்கெட் கீப்பர் சகா (10 கேட்ச்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Congratulations, Rishabh Pant!
— ICC (@ICC) December 10, 2018
He has taken 11 catches in the match – the most in a Test for India – and has equalled the all-time record of Jack Russell and AB de Villiers. #AUSvIND LIVE ⬇️https://t.co/sCMk42Mboc pic.twitter.com/ed5hSieOBS