தேர்வுத்தாள் முறைகேடு.. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் அதிகாரி சஸ்பெண்ட்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 03, 2018 01:33 PM

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வருவன. இந்த பல்கலைக் கழகத்துக்கு வந்த பின்னரே பொறியியல் செமஸ்டர் தேர்வுத்தாள்கள் வேறு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு திருத்தப்படும். ஆனால் இந்த தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களும் குறைந்த மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களும், தங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தப்பட்டுள்ளனவா என்கிற சந்தேகம் எழும்போது, ரீவேல்யூவேஷன் எனப்படும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது உண்டு.
இந்த தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில்தான் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், பேராசிரியர் உமா தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தியக்தில் 24 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் வழங்கப்பட்டதும், மொத்தமாக 16,636 மாணவர்கள் முதல் மதிப்பீட்டைக் காட்டிலும் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்ததை அடுத்து, தேர்வுத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் ரூ 400 கோடி சுருட்டியதாகவும் உமா மீது புகார் எழுந்தது.
இதுபோன்ற செயலில் ஈடுபட்ட உமாவின் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். நேர்மை, நியாயம் ஆகியவற்றை மீறுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாதெரிவித்துள்ளார்.
