’டிசம்பரில் கட்சி தொடங்கும் அறிவிப்பு இல்லை; ஆனால் 90 % தயார்’: ரஜினி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 20, 2018 03:26 PM
நடிகர் ரஜினிகாந்த் பலதரப்பட்ட சிக்கல்களுக்கும் பலதரப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பிறகு அரசியல்வாதி ரஜினிகாந்த் ஆனார். அவரது ரசிகர்களையும் ரஜினி ரசிகர் என்கிற இடத்தில் இருந்து ரஜினி தொண்டர்களாகினர்.
ஆனால் மிகவும் சன்னமாகவே அவர் அரசியல் நகர்வுகளைத் திட்டமிட்டு நகர்த்தினார். தான் மிகவும் மரியாதை வைத்திருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் போன்றோர் இருந்ததாலேயே அப்போது அரசியலுக்கு வரவில்லை என்றும், அவர்களுக்கான வெற்றிடம் உருவாகியதால், தன்னைப் போன்றோர்கள் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் எம்ஜிஆர் போன்ற ஆட்சியைத் தரவல்லதற்கான திறன் தன்னிடம் இருப்பதாகவும் கல்லூரி நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் பேட்ட திரைப்பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியவர், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அதில்,தான் கட்சி தொடங்குவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி தான் கட்சித் தொடங்கவிருப்பதாக வரும் செய்தி தவறானது என்று கூறியவர், ஆனால் அதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.