
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரன் 15 நாட்கள் பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், தனது குடும்ப சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தன்னை ஒரு மாதம் பரோலில் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும், என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் அரசியல் பேசக்கூடாது, ஊடகங்களிடம் பேசக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோலில் வெளியே செல்ல அனுமதி அளித்திருந்தனர்.
இதனையடுத்து, இன்று சிறையிலிருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தன் வீட்டிற்கு செல்கிறார்.
BY SATHEESH | MAR 5, 2018 11:03 AM #RAJIVGANDHIASSASSINATIONCASE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories