தடைகளைத் தாண்டி 'கர்நாடகாவில்' வெளியாகிறது காலா
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 06, 2018 01:35 PM
'காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் தெரிவித்தனர். இதனால் 'காலா' அங்கு வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, "நாளை உலகம் முழுவதும் 'காலா' வெளியாகிறது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை.காவிரி விவகாரத்தில் நான் கருத்து தெரிவித்ததற்காக படத்தை வெளியிடாமல் இருப்பது சரியல்ல.
'காலா' வெளியாகும் திரையரங்கங்களுக்குப் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் குமாரசாமி உரிய பாதுகாப்பு வழங்குவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.இறுதியில் கன்னட அமைப்புகளுக்கும் கர்நாடக அரசுக்கும் ரஜினி கன்னடத்தில் பேசி கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுமார் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாக சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'காலா கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும்'..ரஜினி நம்பிக்கை!
- Karnataka withdraws flood alert for Bengaluru
- Defamation notice issued against Rajinikanth over ‘Kaala’
- கர்நாடகாவில் 'காலா' வெளியாக 'ஸ்டாலின்' நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- Rajinikanth responds to allegations of mistreating journalists