WATCH VIDEO: நெஞ்சு வலியால் சரிந்த பயணி...மருத்துவராக மாறி உயிரைக் காத்த ரயில்வே காவலர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 22, 2018 12:09 PM
புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த ரயில் பயணி ஒருவருக்கு உயிர் காக்கும் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றி இருக்கிறார் ரயில்வே காவலர் பலராம் சிங்.
புதன்கிழமை இரவு 10 மணிக்கு புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் திடீரென பயணி ஒருவர் மயங்கி விழுந்தார்.உடனே அவரை காப்பாற்றுமாறு சக பயணிகள் மாநில ரயில்வே காவலர் பலராம் சிங்கை அழைத்தனர். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பலராம், உடனடியாக மயங்கி விழுந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சைகளை செய்தார். அவர் மயங்கிய நிலையில் இருந்த போது, நெஞ்சுப் பகுதியில் பலமாக அழுத்தியும், வாய்ப் பகுதியில் காற்றை செலுத்தியும் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையை அளித்தார்.
இதுபோல தொடர்ந்து செய்து கொண்டே இருந்த நிலையில், சுமார் 10 - 15 நிமிடங்களில் அந்த பயணி மயக்கம் தெளிந்து கண் விழித்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வியாழக்கிழமை காலை வீடு திரும்பியுள்ளார்.
சமயோதியமாக செயல்பட்டு பலராம் செய்த முதலுதவி சிகிச்சையே அந்த பயணி உயிர் பிழைக்க முக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பலராம் சிங்யின் இந்த சேவையை காவல்துறையினர் மற்றும் பயணிகள் என பலரும் மனதார பாராட்டினார்கள்.