
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மருத்துவக் கனவுகளுடன் வலம்வந்த அரியலூர் மாணவி அனிதா, கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழக மக்களை அதிகம் பாதித்த நிகழ்வாக அனிதாவின் மரணம் அமைந்தது.
இந்த நிலையில், அனிதாவின் நினைவாக தந்தை பெரியார் நகரில் உள்ள குழுமூர் பகுதியில் (அரியலூர் மாவட்டம்) நூலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நடிகர் லாரன்ஸ் முதல் செங்கல்லை எடுத்து வைத்து, அனிதா நினைவு நூலகக்கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 5, 2018 10:52 AM #RAGHAVALAWRENCE #ANITHA #ராகவா லாரன்ஸ் #அனிதா #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories