'யார் சொன்னா எனக்கு டெஸ்ட் மட்டும் தான் விளையாட தெரியும்'?...டி-20யில் தெறிக்க விட்ட இந்திய வீரர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Feb 21, 2019 02:21 PM
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாற்று சாதனை படைக்க முக்கிய காரணமாக இருந்தவர் புஜாரா.டெஸ்ட் போட்டிகளில் பட்டையை கிளப்பும் புஜாராவால்,டி-20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அடித்து விளையாடி ரன் சேர்க்க முடியாது என பலரும் கூறியிருந்தனர்.இதனால் ஒரு கட்டத்தில் ஐ.பி.எல் போட்டியில் இருந்தே புஜாரா கழற்றி விடப்பட்டார்.
இந்நிலையில் நான் டெஸ்ட் பேட்ஸ்மேன் மட்டுமல்ல என்னாலும் டி-20யில் சாதிக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார் புஜாரா.மாநில அணிகளுக்கு இடையிலான சையது முஸ்டாக் அலி டி-20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் ரயில்வே அணியும், சவுராஷ்டிரா அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.தொடக்க வீரராக புஜாரா களமிறங்கினார்.டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை போன்று இந்த போட்டியிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தான் எதிர்கொண்ட அனைத்து பந்துகளையும் தும்சம் செய்தார்.
ஒரு கட்டத்தில் பௌலிங் போட்ட வீரரையே சோர்ந்து போக செய்த புஜாரா,முதல் 29 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில்,அடுத்த 32 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.இது உண்மையிலேயே புஜாரா தான என அனைவரையும் வாய்பிளக்க வைத்த அவர்,சவுராஷ்டிரா அணிக்காக டி-20 போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.