சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, நடராஜனின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான விளாருக்கு (தஞ்சாவூர்) எடுத்து செல்லப்பட்டது.
சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ள நடராஜனின் உடலுக்கு, பல்வேறு தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் நடராஜன் மறைவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடராஜனின் மறைவிற்கு நடராஜனை அறிந்தவர்களளெல்லாம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரால் ஆளானவர்களெல்லாம் காணாமல் போனார்கள். நடராஜனோடு சேர்ந்து நன்றி என்ற நாகரிகமும் செத்துப்போய்விட்டது,'' என தெரிவித்துள்ளார்.
நடராஜனின் மறைவிற்கு நடராஜனை அறிந்தவர்களளெல்லாம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரால்
— Nanjil Sampath (@NanjilPSampath) March 21, 2018
ஆளானவர்களெல்லாம் காணாமல் போனார்கள் . நடராஜனோடு சேர்ந்து நன்றி என்ற நாகரிகமும் செத்துப்போய்விட்டது. #RIPNatarajan #Natarajan @AIADMKOfficial #TnPolitics #TNGovernment
OTHER NEWS SHOTS