'10 வருஷக் கதை ஒரே நாள்ல சொல்ல முடியாது'... போலீசாரை அதிர வைத்த நிர்மலா தேவி!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 19, 2018 11:16 AM
அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் செல்போனில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிர்மலா தேவியை விசாரித்த போலீசார் அவரது பதில்களைக் கண்டு மிரண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே, கல்லூரி மாணவிகளை நிர்மலாதேவி செல்போனில் தொடர்புகொண்டு அட்ஜஸ்ட்மெண்ட்க்கு வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், உயர் கல்வித் துறையில் பல அதிகாரிகளுடனும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சிபிசிஐடி விசாரணையின் போது, நிர்மலாதேவியிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Fake photo circulated on social media as Nirmala Devi
- “Don’t even know her face”: TN Governor’s statement on Nirmala Devi
- Nirmala Devi remanded in judicial custody
- 'நிர்மலா தேவி முகத்தைக்கூட பார்த்ததில்லை'... தமிழக ஆளுநர் விளக்கம்!
- ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் படிக்கணுமா?.. ஆசை வார்த்தைகளால் 'மாணவிகளை' வளைக்கப்பார்த்த நிர்மலாதேவி!
- நிர்மலா தேவிக்கு 'ஏசி அறை ஒதுக்கிய அதிகாரி'... மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்!
- Professor Nirmala Devi case transferred to CB-CID
- 'செல்போனைப் பார்த்து அதிர்ந்த போலீசார்'...சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது 'நிர்மலா தேவி' வழக்கு
- Police break into professor Nirmala’s house, arrest her
- Professor allegedly lures students into prostitution, Anbumani demands CBI enquiry