சபரிமலை கலவரம்: மனமுடைந்த போலீசாரின் வேதனை.. பரவிவரும் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 17, 2018 07:30 PM
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் பலரும் எதிர்ப்பு காட்டி கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு குவிந்திருந்த போலீசார், சில பெண் பக்தர்கள் மற்றும் முக்கிய பத்திரிகை நிறுவனங்களின் நிரூபர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, பூஜை தொடங்கியது.
இரவு 10.30 மணி வரை ஆலயப் பெருவிழாவில் ஐயப்பனை பக்தகோடிகள் கண்டு தரிசிக்கலாம் என்றிருக்க, 15க்கும் மேற்பட்ட போலீசார் தாக்கப்பட்டதாலும், தொடர்ந்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொணர முயன்றதாலும் வெறுத்துப் போன போலீசார் சிலர், வேதனை காரணமாக பம்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலவரக் காரர்களின் பைக்குகளை அடித்துக்கொண்டும் உதைத்துக்கொண்டும் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.
பெருவாரியான கலவரங்களில், போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தவ்வோ அல்லது ஒரு தரப்பினரை காக்கவோ முயன்று தாங்களும் தாக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH #Kerala: Police personnel vandalise vehicles parked in Pampa. Incidents of violence had broken out today in parts of the state over the entry of women of all age groups in #SabarimalaTemple. pic.twitter.com/xi3H4f5UUU
— ANI (@ANI) October 17, 2018