
அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க கடந்த பிப்ரவரி 24-ம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்தார்.
விமான நிலையத்திலிருந்து கலைவாணர் அரங்கம் நோக்கி சென்ற மோடிக்கு வழியெங்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் பிரதமர் மோடியை நோக்கி காலணியைக் காட்டியதாகவும் இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பழனி (46) என்றும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பிரதமரை நோக்கிக் காலணி காட்டியதால், போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து பழனியைக் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
BY SATHEESH | MAR 2, 2018 5:22 PM #CHENNAI #MODI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories