
8 கோடி நகைகள் 'களவுபோன' வழக்கில் திடீர் திருப்பம்.. போலீஸ் துரித நடவடிக்கை!
Home > News Shots > தமிழ்By Manjula | May 29, 2018 01:16 PM

திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நேற்று சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வங்கியின் சார்பில் திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்,கொள்ளை போன நகைகளை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்து போலீசார் அசத்தியுள்ளனர். இதுதொடர்பாக வங்கி ஊழியர்களை போலீசார் விசாரித்தபோது அவர்களுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனியார் இடத்தில் வைத்து விசாரித்தபோது, வங்கியில் உதவியாளராகப் பணியாற்றிய விஸ்வநாதன், சூப்பர் மார்க்கெட் செக்யூரிட்டி ஜெய்கணேஷ் மற்றும் கௌதம் ஆகிய மூவரும் நகைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து,கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை விஸ்வநாதன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பேக்கில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளை நடந்த 12 மணிநேரத்திற்குள் கொள்ளையர்களைக் கண்டறிந்து போலீசார் நகைகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.



OTHER NEWS SHOTS
