அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்:அச்சத்தில் மக்கள் !
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 09, 2018 12:28 PM
தமிழகத்தின் கிருஷ்ணகிரியில், கடந்த வருடம் ஜூலையில் ஜிகா வைரஸ் பரவியது.இது சுகாதாரத்துறையின் கடுமையான நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.இந்நிலையில் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் 7 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் அலுவலகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி, ஒருவருக்கு ஜிகா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புனேவுக்கு, 22 பேரின் பரிசோதனை மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜெய்ப்பூருக்கு இன்று சிறப்புக் குழு ஒன்றை அனுப்பி அறிக்கையை தயார் செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூரின் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 பேரும் தனி அறையில் வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஜெய்ப்பூரின் சாஸ்திரி நகரில் , ஜிகா வைரஸால் பாதிப்படைந்த நபரின் வீடு இருக்கிறது.
இதையடுத்து, அங்கு 179 மருத்துவக் குழுக்கள் தொடர்ந்து மக்களிடம் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்து அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து வருகிறது.அதேபோல பிகார் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும், ஜிகா வைரஸ் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.