
ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக, அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஏர்செல் நிறுவனம் கூறுகையில், "மீண்டும் ஏர்செல் டவர் சிக்னலில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செல்போன் கோபுரம் வைத்திருப்பவர்களால் சிக்னல் கிடைக்காமல் போகலாம்.
எனவே, ஏர்செல் வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்," என தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இதேபோல, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏர்செல் சேவை முடங்கியதால், வாடிக்கையாளர்கள் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது
BY MANJULA | FEB 28, 2018 1:09 PM #AIRCEL #TAMILNADU #ஏர்செல் #தமிழ்நாடு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories