அடப்பாவமே! ஃபிளைட் ஓட்டும்போது பைலட் தூங்குறது நியாயமாரே?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 28, 2018 12:05 PM
pilot falls asleep during the flight missed the landing site

நம்மூர்ல லாங் டிராவல் பேருந்துகளில் பயணிக்கும்போது டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்து தூங்க கூடாது என சொல்வார்கள். காரணம் நாம் தூக்கம், குறட்டை, கெட்டாவி என ஏதேனும் செய்தால் போதும், ஓட்டுபவருக்கு கிலி ஆகிவிடும். நம் தூக்கம் அவருக்கு தூக்கத்தை வரவழைக்கும் என்கிற உளவியல்தான். ஆனால் ஓட்டுநர் ஒரு நொடி லைட்டா கண் சொக்குவதை பார்த்தால், பார்க்கும் பயணிக்கு அதுமுதல் தூக்கம் வந்து தொலையாது. 

 

ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு விமானி, தூங்கிவிட்டதால், விமானத்தை தரையிறக்க வேண்டிய தூரத்தை தாண்டி ஏறக்குறைய 50 கி.மீ தள்ளிச் சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் இருக்கும் தேவன்போர்ட்டில் இருந்து, கிங் தீவுக்கு செல்லும் விமானத்தில் இவ்வாறு தூங்கிய விமானிக்கு விசாரணை கமிஷன் வைத்திருக்கின்றனர், ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவினர்.

 

பிஏ-31 விமானத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த விமானி விமானம் இயக்குவதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் பைலட் தூங்கியதற்கான காரணத்தையும் அதற்கான முறையான விளக்கத்தையும், அடுத்து எடுக்கப்படவேண்டிய ‘இன்கெபாசிடேஷன்’ எனப்படும் செயலில் இருந்து தவறியமைக்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது மேற்கண்ட பாதுகாப்பு பிரிவு.

Tags : #VIRAL #FLIGHT #AIRPLANE #PILOT #AUSTRALIA #PILOT INCAPACITATION #ATSB