கவிழ்ந்த லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்துச் சென்ற ஊர்மக்கள்.. விலையேற்ற எதிரொலி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 03, 2018 12:35 PM
கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் 80 ரூபாய் இருந்த பெட்ரொலின் விலை சன்னமாக விலை ஏற்றம் அடைந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனாலும் பெட்ரோல் விலையேற்றம் அடைந்துள்ளதை அறியாத அளவிற்குமானவர்கள் இருக்கவே செய்கின்றனர்.
மத்திய தரவரக்க மக்கள் பலரும் பெட்ரோல் விலையேற்றத்தை கவனித்து வருவதையும் குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டு மாதம் தொடக்கத்தில் 80 ரூபாய் கிட்டத்தட்ட 2 ரூபாய் 98 காசுகள் அதிகமாகி, 82 ரூபாய் 98 காசுகளாக உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலையில் 71 ரூபாயில் இருந்து மடமடவென 4 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதுபற்றி பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், இந்த விலையேற்றம் தற்காலிகம்தான் என்றும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள காலாபுராகி மாவட்டத்தில் பெட்ரோல் சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது திடீரென கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து கசிந்தது. உடனே அங்கு குழுமிய உள்ளூர் மக்கள் லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரித்துச் சென்றனர்.