கிடு கிடுவென பெட்ரோல் விலை 90-யை தாண்டிய மெட்ரோ நகரம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 24, 2018 03:32 PM
பெட்ரோல்,டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.இதன் புதிய உச்சமாக மும்பையில் பெட்ரேல் விலை ரூ. 90-யை தாண்டி விட்டதாக இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை இன்று லிட்டருக்கு 5 காசுகள் முதல் 12 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையின்படி, மும்பையில் பெட்ரோலின் விலை ரூ. 90-யை தாண்டியுள்ளது. அங்கு ரூ. 90.08-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.இது மும்பைவாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.99-க்கும்,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 82.27-க்கும், கொல்கத்தாவில் ரூ. 85.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.டீசலை பொறுத்தவரையில் மும்பையில் ரூ. 78.58-க்கும், ரூ. 74.02-க்கு டெல்லியிலும், ரூ. 75.87-க்கு கொல்கத்தாவிலும், ரூ. 78.26- சென்னையிலும் விற்பனையாகிறது.புதிய விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி பெட்ரோலை பொறுத்தவரையில் டெல்லி மற்றும் மும்பையில் லிட்டருக்கு 11 காசுகளும், கொல்கத்தாவில் 10 காசுகளும், சென்னையில் 12 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. டீசலைப் பொறுத்தளவில் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் 5 காசுகளும், சென்னையில் 6 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.