
கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
அதிகாலை நான்கு மணியளவில் வீசப்பட்டுள்ள பெட்ரோல் குண்டுகள், கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் பாஜக அலுவலகத்தின் சுவரை தாக்கியதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
BY SATHEESH | MAR 7, 2018 9:16 AM #BJP #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories