வீடியோ: விபத்தினால் நடக்கமுடியாமல் போனவரை சக்கர நாற்காலியில் தள்ளிச்செல்லும் செல்ல நாய்
Home > News Shots > தமிழ்By Behindwoods News Bureau | Jul 27, 2018 12:17 PM
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தாவோ நகரில் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் போன தனது முதலாளியை சக்கர நாற்காலியில் அவரது செல்ல நாய் தள்ளிச்செல்லும் வீடியோ நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. பிறந்து ஏழு மாதங்களே ஆன அந்த நாய் 'டிகோங்', பிறந்ததிலிருந்தே 46 வயதான தனது எஜமானர் டானிலோ அலார்கோனுடன் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கிய அலர்கோன் தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தால் நடக்கமுடியாமல் போனது. அப்போதிலிருந்து அவர் வெளியில் செல்வதற்கு சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது. சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த ரெவில்லா என்பவர் எடுத்த வீடியோவில் அலர்கோன் தனது கைகளின் மூலம் சக்கரங்களைச் சுழற்றி முன்போகையில், அவரது நாய் பின்னாலிருந்து தனது தலை மற்றும் மூக்கின் மூலம் தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகியிருக்கிறது.
அந்த வீடியோ கடந்த ஜூன் 30 அன்று எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. முகநூலில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ரெவில்லா இது போன்ற காட்சிகளை தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்திருப்பதாகவும் தன் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனவும் நெகிழ்ந்துள்ளார்.