வேண்டாம் என இறக்கிவிடும் உரிமையாளர்.. பின்னாலேயே ஓடும் நாய்.. வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 26, 2018 10:26 PM
இங்கிலாந்தின் ஸ்டோக் ஆன் ரெண்ட் எனும் நகரில் கடந்த வாரம் ஒரு சாலையில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அதில் ஒரு வீடியோவில் ஒருவர் சாலை ஓரத்தில் தன் காரினை நிறுத்திவிட்டு காரிலிருக்கும் வளர்ப்பு நாயினை வெளியே அழைத்து வருகிறார். பின்னர் சாலையின் மறுபுறம், அந்த நாயை அழைத்துச் சென்று தனியே விட்டபடி, அவர் மட்டும் ஓடிப்போய் காரில் ஏற முற்படுகிறார். ஆனால் அந்த நாயும் அவரது பின்னாலேயே ஓடிப்போய் அந்த காரில் ஏற முயற்சிக்கிறது.
ஆனால் அவர் அந்த காரின் கதவினை இருபுறமும் அடைத்துவிட, அந்த நாய் அவருடன் காரில் ஏற முடியாமல் தவிக்கிறது. பின்னர் கார் வேகமாக செல்கிறது. அந்த நாயும் பின்னே ஓடுகிறது. அப்படி அநாதையாக விடப்பட்ட அந்த நாயினை அவ்வழியாக வந்த ஒருவர் வெட்னரி டாக்டரிடம் ஒப்படைத்துள்ளார். அவர் இந்த தகவலை பிரபல டெய்லிமெயில் பத்திரிக்கைக்கு அளித்துள்ளார்.
அதன்படி RSPCA என்கிற ராயல் சொசைட்டி ஃபார் த பிரிவென்சன் ஆஃப் குருவெல்டி டூ அனிமெல் அமைப்பு இந்த சம்பவம் நடந்த சாலையின் சிசிடிவி காட்சியினை சோதனை செய்துள்ளனர். அதன் பின்னர் இந்த அமைப்பின் இன்ஸ்பெக்டர் நெடாலி பெரவோஸ்கி டெயிலி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அந்த நாயினை அநாதையாக விட்டுச்சென்றது மாபெரும் குற்றம் என்று வலியுறுத்தி எப்படி அவரால் இதை செய்ய முடிந்தது என வருத்தப்பட்டுள்ளார்.
மேலும் அந்த காரில் இன்னொருவர் இருந்ததாகவும், அவர்தான் வண்டி ஓட்டியிருப்பதாகவும் வீடியோ ஆதாரத்தில் தெரியவந்துள்ளது. எனினும் வெட்னரி டாக்டரின் பராமரிப்பில் தற்போது பாதுகாப்பாக இருக்கும் அந்த நாயிற்கு ஸ்நூப் என்றும் பெயரும் வைத்துள்ளனர்.
Thank you to everyone who has shared the @RSPCA_official appeal about the dog Snoop who was dumped on CCTV in Stoke-on-Trent. It has gone global and millions of people have viewed the footage. This is proof of the power of the media! Hopefully we will find the man responsible. pic.twitter.com/c5goObOaQY
— Rachel Butler RSPCA 🐾🐶🐦 (@RachRSPCA) December 24, 2018