‘வீடியோ காலில் மனைவியை துன்புறுத்தினார்கள்’.. பயணிகளிடம் மாட்டிய கேப் டிரைவர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 03, 2018 04:05 PM
passengers abducts ola driver and forced his wife through video call

பெங்களூர் நகரில் அன்றைய தினம், ஏறக்குறைய 13 மணி நேரம் ஓலா கால்- டாக்ஸியை ஓட்டிய 30 வயது மதிக்கத்தக்க டிரைவர் சோமஷேகர், தன் கடைசி ட்ரிப்பாக, பயணியரை சென்று சேர்த்துவிட்டு வீட்டுக்கு செல்ல முடிவெடுத்திருந்தார். இரவு 10.30 மணிக்கு அடுகோடியில் இருந்து 4 பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார். ஆனால் பாதி வழியில் கேப், டொம்மசண்ட்ரா எனும் இடத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது அந்த பயணிகளுள் ஒரு நபர், பிடாதிக்குச் செல்லச் சொல்லி சோமஷேகரின் கழுத்தில் கத்தி வைத்துள்ளனர். பயந்துபோன டிரைவர் சோமஷேகர்  காரை அந்தப்பக்கம் செலுத்தியுள்ளார்.


அங்கு சென்றபின் சோமஷேகர் அந்த கும்பலிடம் மாட்டிக்கொண்டார். அவருடன் சென்னப்பட்னா அருகே சென்ற கும்பலில் ஒருவன், தன் தொண்டையில் கத்தி வைத்துக்கொண்டு, தனது ஏடிஎம் கார்டினையும் பின் நம்பரையும் கேட்டு வாங்கிக்கொண்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் கணக்கில் இருந்து அந்த கும்பல் 20 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும் சோமஷேகரை கத்தி முனையில், 30 நிமிடங்கள் வீடியோ கால் மூலம்  அவரது மனைவியிடம் பேசவைத்துள்ளனர். அப்போது அவரது மனைவியின் ஆடைகளை அகற்றும்படி வலியுறுத்தி, அவர்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அதே ஏரியாவில் லாட்ஜ் ஒன்றில் வைத்து அந்த கும்பல் சோமஷேகரை அடைத்துள்ளனர்.


பின்னர் கழிவறைக்குச் செல்வதாகச் சொல்லி, சோமஷேகர் தப்பிவந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பொதுவாக இரவு நேரங்களில் கேப் டிரைவர்களை நம்பி போகும் பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதியினை அந்த கேப் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் கேப் ஓட்டும் டிரைவருக்கும் டிரைவரின் குடும்பத்துக்கும் நேர்ந்த இந்த துயரத்துக்கு வருத்தம் தெரிவித்த கேப் நிறுவனம் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது.

Tags : #BIZARRE #DRIVER #CRIME #KIDNAP #CALLTAXI #CABDRIVER #BANGALORE