பிறந்த குழந்தைக்கு ஹிட்லரின் பெயர் வைத்ததால் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 20, 2018 01:19 PM
Parents arrested for naming their child hitler

பெற்ற குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை சூட்டியதால் சிறைக்கு அனுப்பப்பட்ட பெற்றோர்கள் பற்றிய செய்தி உலகையே உலுக்கியுள்ளது. பிரிட்டனில் நடந்த இந்த சம்பவத்தினால் தாமஸ், கிளாடியா பெட்டதஸ் என்கிற தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு அடால்ஃப் என்று பெயர் வைத்ததை அடுத்து, பிரிட்டனின் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக நடந்துகொண்ட குற்றத்துக்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யூத மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை நிகழ்த்திய ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக வலம்வந்தவர் என்பதாலும், கொடூர மனம் படைத்தவராக பார்க்கப்பட்டதாலும், ஹிட்லரின் பிம்பம் பலரின் மனதிலும் பெரும் அதிகாரத்தின் அடையாளமாக இடம் பெற்றிருக்கிறது. ஒருவரின் அதிகாரத்தை விமர்சிப்பதற்கும் கூட, நாம் அவரை ‘ஏன் ஹிட்லர் மாதிரி நடந்துக்குறீங்க’ என்று அழைக்கிறோம்.


இந்த நிலையில் ஹிட்லரின் பெயரின் ஒரு அங்கமான அடால்ஃப் என்ற பெயரை தங்கள் குழந்தைக்கு வைத்தது மட்டுமல்லாமல், இந்த பெற்றோர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்து ஹிட்லரின் கருத்தினை பரப்பியுள்ளனர்.  இதற்காக கிளாடியா பெட்டதஸ்க்கு 5 வருடமும் தாம்ஸ்க்கு 6 வருடமும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BABY #HITLOR #ADOLF HITLER #BABYNAME #LONDON