
உலகிலேயே பச்சிளம் குழந்தைகள் பிறப்பதற்கு மோசமான நாடுகள் பட்டியலை யுனிசெப் (ஐக்கிய நாடுகள் பன்னாட்டு சிறுவர் நிதியகம்) அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தானில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 45.6 குழந்தைகள் இறக்கின்றன. இதனால், உலகிலேயே குழந்தைகளின் பிறப்புக்கு மோசமான நிலைகொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.
மேலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நாடாக ஜப்பான் உள்ளது. அங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில் 0.9 குழந்தைகள் ஒரே மாதத்தில் இறக்கிறதாம். இந்த பட்டியலில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தை ஐஸ்லாந்து (1.0/1000), சிங்கப்பூர் (1.1/1000), பின்லாந்து (1.2/1000) ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
BY SATHEESH | FEB 20, 2018 3:51 PM #UNICEF #PAKISTAN #CHILD #BIRTH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories