"பவுன்சர் பந்து தாக்கி படுகாயம்"...மைதானத்திலிருந்து ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட அதிரடி வீரர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 10, 2018 01:02 PM
போட்டியின் போது பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்தார்.அவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில்,பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டியில்,நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.இரண்டாவது ஒரு நாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி,முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.இதனையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் ஆடிக்கொண்டிருந்த போது, 13 வது ஓவரை நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் வீசினார்.அப்போது அவர் வீசிய பவுன்சர் பந்து இமாமின் ஹெல்மெட்டில் படு வேகமாக தாக்கியது.இதனால் நிலைகுலைந்து போன இமாம்,நிற்க முடியாமல் தரையில் படுத்துவிட்டார்.அப்போது அவருடன் ஆடிக்கொண்டிருந்த பஹார் ஜமானும் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனும் அவர் எழுத்து கொள்ள உதவினார்கள்.ஆனால் . அவரால் எழுந்து கொள்ள முடியவில்லை.
உடனடியாக மருத்துவர்கள் மைதானத்திற்குள் வரவழைக்கப்பட்டார்கள்.இமாமை பரிசோதித்த மருத்துவர்கள்,அவருக்கு சிகிக்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.இந்நிலையில் இமாம் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு சிறிது ஓய்வு தேவைப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Get well soon #ImamUlHaq pic.twitter.com/MaR0MZPIaM
— Ramiz Ahmed Patel (@ramizrap1) November 9, 2018