திருமுருகன் காந்தியை பார்க்க மருத்துவமனை சென்ற பா.ரஞ்சித், ’பரியேறும் பெருமாள்’ மாரி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 10, 2018 05:04 PM
அண்மைக்காலமாகவே திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சமூக அக்கறை சார்ந்த படங்களை தயாரித்து வருகிறார். தன் பாலின ஈர்ப்பு தொடர்பான பிரிவு 377-ஐ ரத்து செய்து, தற்பாலின சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் அதற்கு முன்பே தன்பாலின சேர்க்கை தொடர்பான உளவியலை ஆவணப்படமான, மாலினி ஜீவரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த, ‘லேடீஸ் அண்ட் ஜெண்டில்வுமன்’ படத்தைத் தயாரித்தார். இதேபோல் ஒடுக்கப்பட்டோர்களின் துயர் நிறைந்த வாழ்வை, சட்டக் கல்லூரியின் கதைக்களத்தில் இருந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’எனும் படத்தையும் தயாரித்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் விடுதலை ஆன சமூக ஆர்வலரும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தியை, இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் இருவரும் மருத்துவமனை சென்று சந்தித்து உடல் நலம் குறித்தும், சிறையில் திருமுருகன் காந்திக்கு நேர்ந்தவற்றைப் பற்றியும் கேட்டறிந்தனர்.