‘கேட்சுகளை கச்சிதமாக கவ்வுகிறீர்கள் போங்கள்’.. வைரலாகும் கோலி கேட்ச்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 14, 2018 03:32 PM
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் துவங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்ததை அடுத்து, முதல் போட்டியில் விளையாடிய ரோஜித் மற்றும் அஷ்வின் ஆகியோருக்கு பதிலாக இந்த போட்டியில் விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் மார்க்ஸ் இருவரையும் களமிறக்கியது. பின்னர் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என்கிற நிலையில் ஆஸ்திரேலிய அணி விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த மேஜிக் நடந்தது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பின் பேட்டின் முனையில் பட்டுத் தெறித்த பந்தினை மிக லாவகமாக ஜம்ப் செய்து, காற்றில் சிறிது பறந்து, வலது கைகளால் பிடித்தார் கோலி. ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய இந்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Just how good was that catch by @imVkohli?pic.twitter.com/Yn3sEGGhRo #AUSvIND
— cricketnext (@cricketnext) December 14, 2018