நவம்பரில் பழைய வெர்ஷன் ‘ஸ்கைப்’ சேவை நிறுத்தப்படுகிறதா?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 28, 2018 07:23 PM
Old Skype version 7.0 comes to an end

வீட்டை விட்டு வெகுதூரத்தில் அல்லது வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு மென்பொருள் அப்ளிகேஷன், ஸ்கைப்  (Skype). அதன் கடைசி வெர்ஷன் 7.0. இந்த வெர்ஷனை அப்டேட் செய்யாவிடின், ஸ்கைப்பை பயன்படுத்துவது முடியாத காரியம் என்பன போன்ற செய்தியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும் செல்போன்களில் ஸ்கைப் 7.0 வெர்ஷன் நவம்பர் 15-ம் தேதி வரையிலும், தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்கைப் 7.0 மற்றும் ஸ்கைப் கிளாசிக் மென்பொருள் அப்ளிகேஷன்கள் நவம்பர் 1-ம் தேதி வரையிலும்தான் செயல்படும் என்று  அறிவித்துள்ள்  இந்நிறுவனம் அடுத்த அப்டேட் வெர்ஷனான ஸ்கைப்-8 ஐ புதுப்பிக்காவிட்டால், ஸ்கைப் சேவை நிறுத்தப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் பலரும் இந்த சாஃப்ட்வேரை அப்டேட் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Tags : #SKYPE #NETWORK