திண்டுக்கல், அன்னை ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள், நடக்க முடியாத முதியவரை கோயம்புத்தூரில் உள்ள ஒரு தெருவில், விட்டுச் சென்றுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த முதியவரிடம் விசாரித்தபோது, அன்னை ஆசிரமத்தில் நடைபெறும் முறைகேடுகள் தனக்கு பிடிக்காததால் தான் வெளியேற விரும்புவதாக ஆசிரம நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஆசிரம ஊழியர்கள் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னோடு சேர்த்து ஐந்து பேரை திண்டுக்கல்லில் இருந்து ஏற்றி வந்து, திருப்பூர் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய பகுதிகளில் சாலையில் விட்டு சென்றதாகக் கூறியுள்ளார்.
அன்னை ஆசிரமம், காஞ்சிபுரம் ஜோசப் கருணை இல்லத்தின் கீழ் இயங்கி வருதாகக் கூறப்படுகிறது. தெருவில் விடப்பட்ட முதியவர், சர்ச்சைக்குள்ளான ஜோசப் கருணை இல்லம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS