6 நாளில் 6 கோடி, பலியான ராணுவ வீரர்களுக்காக பேஸ்புக்கில் நிதி திரட்டிய ‘தனி ஒருவன்’!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 22, 2019 11:57 AM
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவர் பேஸ்புக் மூலம் தனி ஒரு ஆளாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டி அசத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர்.
இதேபோல் அமெரிக்கவாழ் இந்தியரான விவேக் படேலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ எண்ணியுள்ளார். இதனால் விவேக் தனது பேஸ்புக் மூலம் நிதி திரட்ட தொடங்கினார்.
இதன் பலனாக இதுவரை 8 லட்சம் அமெரிக்க டாலர்களை விவேக் திரட்டியுள்ளார். இந்த பணம் முழுவதும் இந்திய அரசிடம் வழங்கப்படும் என கூறிய அவர், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலத்திடம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனி ஒரு ஆளாக பேஸ்புக் மூலம் 8 லட்சம் அமெரிக்க டாலர்களை திரட்டிய விவேக் படேலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.