‘அந்த சாதனையை முறியடிச்ச இவங்க ஒருத்தர் கூட அப்போ பொறக்கல’..ஆச்சரியமான உண்மை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 30, 2018 01:38 PM
மெல்போர்ன் மைதானத்தில் 37 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்று பெரும் சாதனை படைத்துள்ளது என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பெர்த் மைதானத்தில் நிகழ்ந்த டெஸ்டின் போது பேசிய விராட் கோலி, மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெறுவது என்பது சிறந்த பந்துவீச்சினை கருத்தில் கொண்டுதான் திட்டமிடப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அதைப் போலவே பலராலும் மோசமான பிட்ச் என்று சொல்லப்பட்ட மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பான ஃபீல்டிங்கை அமைத்து இந்திய அணி வென்றுள்ளது.
இது 37 வருடங்களுக்கு பிந்தைய சாதனையாக பார்க்கப்படுவதற்கு காரணம், இதே மெல்போர்ன் மைதானத்தில் 1981-ஆம் ஆண்டு இந்தியா வென்றது. அதன் பிறகு தற்போது 2018-இல் இந்திய அணி அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வென்றிருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 37 வருடங்களுக்கு முன்பாக மெல்போர்ன் மைதானத்தில் விளையாடி வென்ற ஒருவர் கூட தற்போது வெற்றிபெற்ற இந்திய அணியில் இல்லை. சொல்ல போனால் தற்போதைய அணியில் இருக்கும் யாரும், 37 வருடங்களுக்கு முந்தைய அந்த மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்தியா வென்றபோது பிறக்க கூட இல்லை என்பதுதான் உண்மை. இந்த துடிப்பான இளம் அணியினரை இதனால் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போதைய இந்திய டெஸட் அணி வீரர்களுள் ரோகித் மட்டுமே மூத்தவர். அதாவது 1987ல் பிறந்தவர். அவருக்கு அடுத்த வருடம் 1988ல் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ஜடேஜா, இஷாந்த் உள்ளிட்டோர் பிறந்துள்ளனர். மேலும்1990ல் ஷாமியும், 1991ல் மாயங்க்கும் பிறந்துள்ளனர். ஹனும விஹாரி, பும்ரா இருவரும் 1993ல் பிறந்தவர்கள். இருப்பதிலேயே கடைக்குட்டிச் சிங்கம் பாண்ட் 1997ல் பிறந்தவர். இவர்தான் தற்போதைய அணியில் இடம் பெற்றிருக்கும் மிக மிக இளம் வீரர்.