’பேலன்ஸே இருக்கோ இல்லையோ, வங்கிக்கணக்கு வேண்டும் என்ற பிரதமர்’: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 01, 2018 06:31 PM
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, கிராமப்புற மக்களுக்காக அஞ்சல் துறை சார்பில் வங்கிச் சேவையை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3,250 கிளைகளில் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அஞ்சலக வங்கியில் சேமிப்பு கணக்கு, சில்லறை வணிக பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என்றும், மேலும் பரிமாற்றங்களுக்கு, பணம் எதுவும் தேவையில்லை, கைரேகை போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக வங்கி கணக்குகளை தொடங்க ஆதார் அட்டை அவசியமானது, மற்றும் அதுவே போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பரிவர்த்தனைகளுக்கு QR அட்டை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சேவையை தமிழகத்தில் திறந்து வைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘பேலன்ஸ் இருக்கிறதோ இல்லையோ, அனைவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் என்று எண்ணியவர் எங்கள் பிரதமர் மோடி’ என்று பெருமிதமாக கூறினார்.