ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு நடுக்கடலில் டெலிவரி.. அசத்தும் கம்பெனி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Feb 11, 2019 10:22 PM
கடலின் பிரம்மாண்டத்தை ரசிக்க கப்பலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளை துபாயின் வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளது ஒரு தனியார் நிறுவனம்.
அன்றாடம் துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக பாலைவனத்தின் கடும் உடல் சூட்டினை தணித்து மிதமாக மாற்றிக்கொள்ள பலரும் விரும்புவதால், கப்பலில் மிதந்து செல்லும் கடல் பயணத்திற்குத்தான் எப்போதுமே கிராக்கி அதிகம். அந்த வரவேற்பை பயன்படுத்திதான் CARREFOUR எனும் தனியார் நிறுவனம் பயணிகளை தனது அன்பான வாடிக்கையாளர்களாக மாற்றியுள்ளது.
இந்த நிறுவனம் கப்பலில் செல்லும் பயணிகள் தாங்கள் விரும்பிய உணவுகள் மற்றும் பயணத்துக்கு தேவையான பொருட்களை தாங்கள் பயணிக்கும் கப்பலில் இருந்தபடியே ஆர்டர் செய்து, பெற்றுக்கொள்ளும்படியான செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி அந்த ஆப் மூலம் பயணிகள் ஆர்டர் செய்யும் பொருட்களை, அதே கடற்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் CARREFOUR மிதவை கப்பல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கடலில் அலைச்சறுக்கு செய்தபடி வெவ்வேறு கப்பல்களுக்கு சென்று ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு டெலிவரி செய்வார்.
கடலில் மிதக்கும் கப்பலில் இயங்கும் இந்த சூப்பர் மார்க்கெட்டில் 300 வகையான பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும், இந்த மிதவை கப்பல் கடல் மாசுபாட்டை தவிர்க்க, பயணிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணிகளிலும் ஈடுபடுகிறது. CARREFOUR நிறுவனத்தின் இந்த சேவை தற்போது துபாய் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.