’இருபதுக்கும்’ மேற்பட்ட குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்திய இரும்பு ஆலை விபத்து!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 09, 2018 07:18 PM
சத்தீஸ்கரில், பிலாய் இரும்பு தொழிற்சாலையில் காஸ் குழாய் வெடித்து சுமார் 13 பேர் பலியாகியதும், பல பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதும் பலரையும் வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
பொதுவாகவே தொழிற்சாலைகளில் இதுபோன்று விபத்துக்கள் இயல்பானவை என்றாலும், உயிர்ச்சேதங்களை விளைவிக்கும் வகையில் இருந்துள்ள இந்த தொழிற்சாலையின் வேலை முறைகளை பலரும் கடிந்துகொண்டுள்ளனர். தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு பாதுகாப்பில்லாத் தன்மை நிலவுவது அச்சத்தை ஏற்படுத்துவதாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
மேலும், விபத்துக்குள்ளான மீதமிருப்பவர்களை தொழிற்சாலை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். செய்ல் நிறுவனத்துக்குட்பட்ட இந்த பிலாய் இரும்பு ஆலையில் நிகழ்ந்த இவ்விபத்தினை காவல்துறையினர் சென்று பார்வவையிட்டதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் காயம் பட்டவர்களையும், விபத்தில் பலியானவர்களையும் மீட்டெடுத்தனர்.