மா, லட்சுமி குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் கே.எம் தமிழின் பிரபல நடிகை ஒருவரை இயக்கவிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
'அறம்', 'குலேபாகவலி' படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் "எங்களது 3-வது படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.
'மா' குறும்பட புகழ் சர்ஜுன் கே.எம் இப்படத்தை இயக்குகிறார். ஒரு திகில் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்," என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சத்யராஜ்-வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தைத் தொடர்ந்து, சர்ஜுன் இயக்கும் 2-வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 5, 2018 6:44 PM #NAYANTHARA #LAKSHMI #MAA #நயன்தாரா #லட்சுமி #மா #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories