'கேரள வெள்ளத்துக்கு முன்-வெள்ளத்துக்கு பின்'.. புகைப்படங்களை வெளியிட்டு விளக்கமளித்த நாசா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 28, 2018 03:32 PM
Nasa releases Before and after images of Kerala Floods

ஒட்டுமொத்த கேரளாவையும் புரட்டிப்போட்ட மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, அம்மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளது.மழை-வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை புதுப்பித்திட, சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் கேரள வெள்ளத்துக்கு முன்பும்,பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஒரு புகைப்படம் பிப்ரவரி மாதம் 6-ம் தேதியும், மற்றொரு புகைப்படம் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதியும் செயற்கைக்கோள் வழியாக எடுக்கப்பட்டுள்ளது.புகைப்படத்தில் தண்ணீரின் அளவை நீல நிறத்தில் நாசா சுட்டிக் காட்டியுள்ளது.

 

ஈரப்பதத்தைத் தடுத்து, கேரளா நிலப்பரப்பின் மீது  உருவான அடர்த்தியான மேகங்கள் கேரளாவில் அதிக மழை பொழியும்படி செய்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது. அதாவது கேரளாவில் உருவான கனமழைக்கு காரணம் 'Concentrated Cloud band' தான் என நாசா விளக்கமளித்துள்ளது.

Tags : #KERALA #KERALAFLOOD #NASA