வெளிப்படையாகப் பேசிய முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை?
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 07, 2018 03:02 PM
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் தேர்வுக்குழுவை விமர்சனம் செய்த முரளி விஜய்,கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசமான பார்ம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து பாதியிலேயே முரளி விஜய் நீக்கப்பட்டார்.இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயருக்கு இடம் அளிக்கப்படவில்லை.தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரிலும் இருவருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதனால் தேர்வுக்குழுவை இருவரும் விமர்சித்து இருந்தனர்.
இந்தநிலையில் முரளி விஜய், கருண் நாயர் இருவர் மீதும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேர்வு கொள்கைகளை பற்றி பேசியதன் மூலம் முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் வீரர்களின் ஒப்பந்தத்தை மீறி விட்டனர்.
இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப்படி முடிந்த தொடர்கள் பற்றிய கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கக்கூடாது. ஐதராபாத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெறும் கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து எழுப்பப்படும்” என்றார்.