'மகளின்' திருமணப் பத்திரிக்கையை ராமேஸ்வரம் கோயிலில் வைத்து 'சாமி கும்பிட்ட' முகேஷ் அம்பானி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 27, 2018 06:23 PM
Mukesh Ambani visits Rameswaram temple with wedding invitation

தனது மகளின் திருமணப் பத்திரிகையை ராமேஸ்வரம் கோயிலில் வைத்து, பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

 

இந்தியாவின் நம்பர் 1 தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முக்கிய வி.வி.ஐ.பி-க்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இந்த நிலையில் இன்று காலை தனது மகளின் திருமணப் பத்திரிகையுடன், திருப்பதி சென்ற அவர், அங்கு சாமி சந்நிதியில் திருமண அழைப்பிதழை வைத்து ஏழுமலையானை வணங்கினார். இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக, தனி ஹெலிகாப்டர் மூலம் மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்த அவர், அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார்.

 

இதைத் தொடர்ந்து, கோயிலுக்கு ரூ.55 ஆயிரம் காணிக்கையாக வழங்கினார். முகேஷ் அம்பானி கோயிலுக்கு வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #MUMBAI #MUKESHAMBANI